தேசிய விருது போட்டியில் சமீபத்தில் வெளியான இந்த படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளியான ‘தாதா 87’ திரைப்படம் தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Chaaru Haasan's Dhadha 87 film nominated for National Award

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன்,  சரோஜா,  ஜனகராஜ், ஆனந்த பாண்டி,  ஆகியோர் நடிப்பில் கடந்த  மாதம் வெளியான திரைப்படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.