தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அரசியல் கட்சிகள் காரசாரமான பிரச்சாத்தில் ஈடுபட்டுவந்தன.
மேலும் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் அவ்வப்போது வாக்களிப்பதன் அவசியத்தை பகிர்ந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நோட்டாவுக்கு வாக்களிக்கப்போகிறவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்கள் தொகுதியில் நோட்டா வெற்றி பெற்றது என்றால் நோட்டாவுக்கு சற்று குறைவாக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
தயவு செய்து பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள். பணம் கொடுத்து வெற்றி பெறுபவர், அவர் சம்பாதிக்கணும்னு பார்ப்பாரா? இல்ல உங்களுக்கு நல்லது பண்ணனும்னு பார்ப்பாரா ?
ஒரு படம் பார்க்கணும்னா 10 ரிவியூ பார்த்துட்டு தியேட்டர் போய் படம் பார்க்குறீங்க. உங்கள் தொகுதியில், உங்களை அடுத்த 5 வருடத்துக்கு ஆளப்போறவர் பத்தி ஒரு 5 நிமிஷம் இண்டர்நெட்ல போய் அவர் எப்படி பட்டவர், அவருடைய கொள்கைகள் என்ன என்ன பண்ண போறாங்க தெரிஞ்சிக்கிட்டு ஓட்டு போடலாம் இல்லையா
ஏப்ரல் 18 மறக்காம ஓட்டு போடுங்க. நான் யாருனு முடிவு பண்ணிட்டேன் நீங்க ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.