www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'லியோ'.. சம்பவம் இருக்கு.. தனது டீமுடன் லோகேஷ்!  வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.

Leo Movie Lokesh Kanagaraj and Team Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

Also Read | PS2: பொன்னியின் செல்வன் - 2.. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! செம்ம

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்

இந்த படத்தில் நடிக்கின்றனர்.

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார்.

Leo Movie Lokesh Kanagaraj and Team Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Leo Movie Lokesh Kanagaraj and Team Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leo Movie Lokesh Kanagaraj and Team Viral Photo

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் சமீபத்தில் காஷ்மீரில்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  நிறைவடைந்தது.   லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் படக்குழுவினர் உடன் இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | RC15: ராம் சரணின் மிரட்டலான லுக்கில் தமிழில் வெளியான FIRST LOOK போஸ்டர்..! இதோ

தொடர்புடைய இணைப்புகள்

Leo Movie Lokesh Kanagaraj and Team Viral Photo

People looking for online information on Leo, Lokesh Kanagaraj will find this news story useful.