www.garudabazaar.com

LEO லோகேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சஞ்சய் தத் & மலையாள வில்லன் நடிகர்.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

Leo Sanjay Dutt wishes Lokesh Kanagaraj Birthday

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஆஸ்கார் வென்ற மம்மி ஹீரோ.. The Whale படத்துக்காக பருமன் ஆனது எப்படி? வியக்க வைக்கும் பின்னணி..!

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

Leo Sanjay Dutt wishes Lokesh Kanagaraj Birthday

Images are subject to © copyright to their respective owners.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

Leo Sanjay Dutt wishes Lokesh Kanagaraj Birthday

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், இன்று தமது 37 வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் சஞ்சய் தத், தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் தம்பி, மகன், குடும்ப உறுப்பினர் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு மேலும் பல வெற்றிகளையும், அமைதியையும், மகிழ்ச்சி & நலத்தையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். லவ் யூ!" என பதிவிட்டுள்ளார்.

Leo Sanjay Dutt wishes Lokesh Kanagaraj Birthday

Images are subject to © copyright to their respective owners.

மேலும் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்ட லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் விழாவில் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனியுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

Also Read | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்.. LEO ஷூட்டிங்கில் கொண்டாட்டம் 😍.. வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Leo Sanjay Dutt wishes Lokesh Kanagaraj Birthday

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Lokesh kanagaraj birthday, Sanjay Dutt, Sanjay Dutt wishes Lokesh Kanagaraj Birthday will find this news story useful.