www.garudabazaar.com

LEO ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜூடன் யூடியூபர் இர்பான்.. வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LEO படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Irfan View Irfan with Lokesh Kanagaraj in Leo Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “மணி Sir-க்கு பாட்டு எழுதுனா இவ்ளோ கவனிப்பாரா..?” - பாடலாசிரியர் சொன்ன சீக்ரெட்ஸ்..

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்

இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Irfan View Irfan with Lokesh Kanagaraj in Leo Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Irfan View Irfan with Lokesh Kanagaraj in Leo Shooting Spot

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Irfan View Irfan with Lokesh Kanagaraj in Leo Shooting Spot

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல யூடியூபர் இர்பான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருப்பினும் லியோ படத்தில் இர்பான் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதேபோல் பிராக்ஸ்டார் ராகுல் காஷ்மீர் பகுதியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ .. பார்ட் 2 குறித்த செம அப்டேட்..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Irfan View Irfan with Lokesh Kanagaraj in Leo Shooting Spot

People looking for online information on Irfan, Leo Shooting Spot, Lokesh Kanagaraj will find this news story useful.