www.garudabazaar.com

PS2: பொன்னியின் செல்வன் - 2.. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2, படத்தின் தமிழக ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan PS2 Movie TN rights acquired by Red giant movies

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15.. செம டைட்டிலுடன் வெளியான MOTION POSTER வீடியோ!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Ponniyin Selvan PS2 Movie TN rights acquired by Red giant movies

Images are subject to © copyright to their respective owners.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 

இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan PS2 Movie TN rights acquired by Red giant movies

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan PS2 Movie TN rights acquired by Red giant movies

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan PS2 Movie TN rights acquired by Red giant movies

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | அஜித் வீட்டிற்கு நேரடியாக சென்ற சூர்யா & கார்த்தி.. தந்தை மறைவுக்கு துக்கம் விசாரிப்பு!

Ponniyin Selvan PS2 Movie TN rights acquired by Red giant movies

People looking for online information on Ponniyin Selvan Part 2, PS2, PS2 Movie TN rights, Red Giant Movies will find this news story useful.