www.garudabazaar.com

மைனஸ் குளிரில் ஷூட்டிங்.. காஷ்மீர்ல இருந்து சுடச்சுட LEO படத்தின் வைரல் BTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங் ஸ்பாட் BTS வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Vijay Leo Movie Kashmir Shooting Wrapped

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சரத்குமார் & ராதிகா சரத்குமாரின் அறுபதாம் கல்யாணம்.. மகள் பகிர்ந்த THROWBACK வைரல் ஃபோட்டோஸ்!  

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்

இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Vijay Leo Movie Kashmir Shooting Wrapped

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Vijay Leo Movie Kashmir Shooting Wrapped

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Leo Movie Kashmir Shooting Wrapped

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.  மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. காஷ்மீர் குளிரில் ஷூட்டிங் நடத்திய அனுபவங்கள், ஷூட்டிங் போது ஏற்பட்ட இடையூறுகள், அந்த இடையூறுகளை சமாளித்த விதம் குறித்து படக்குழுவினர் பேசும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. ராணுவ வீரர்கள் நடிகர் விஜய்யுடன் இருக்கும் காட்சிகளும், வீடியோவில் இடம் பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித், சண்டை காட்சி இயக்குனர் அன்பறிவு ஆகியோரும் வீடியோவில் இடம் பெற்றுள்ளனர்.

Also Read | வயதில் மூத்த பிரபலமான சீரியல் நடிகையை திருமணம் செய்த பசங்க பட நடிகர் ! வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Leo Movie Kashmir Shooting Wrapped

People looking for online information on Leo, Leo Movie Kashmir Shooting Spot, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.