www.garudabazaar.com

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்.. LEO ஷூட்டிங்கில் கொண்டாட்டம் 😍.. வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'கபாலி' பொன்னம்பலத்துக்கு ஸ்லோ பாய்சன், குழிதோண்டி செய்வினை செய்த அண்ணன்..! பரபரப்பு பேட்டி..

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்

இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார்.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு படக்குழு சார்பில் லோகேஷ் கனகராஜூக்கு பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டுள்ளது.

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

Images are subject to © copyright to their respective owners.

இதில் லியோ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. புது லுக்கில் லோகேஷ் கனகராஜ் தோற்றமளிக்கிறார்.

Also Read | ஆஸ்கார் வென்ற மம்மி ஹீரோ.. The Whale படத்துக்காக பருமன் ஆனது எப்படி? வியக்க வைக்கும் பின்னணி..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Birthday Celebrations at Kashmir Leo shooting

People looking for online information on Kashmir Leo shooting, Lokesh Kanagaraj, Lokesh Kanagaraj Birthday Celebrations will find this news story useful.