www.garudabazaar.com

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15.. செம டைட்டிலுடன் வெளியான MOTION POSTER வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RC15 படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Shankar Ramcharan RC15 Movie Titled As Game Changer

Images are subject to © copyright to their respective owners.

Also Read | புகழ்பெற்ற மலையாள நடிகர் இன்னசென்ட் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தினையும் ஒரு சேர இயக்கி வருகிறார்.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Shankar Ramcharan RC15 Movie Titled As Game Changer

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

Shankar Ramcharan RC15 Movie Titled As Game Changer

Images are subject to © copyright to their respective owners.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் RC15 படத்தில் ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது.

Shankar Ramcharan RC15 Movie Titled As Game Changer

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. ஒரு பாடல் காட்சி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது.

பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு RC15 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'Game Changer' என பெயரிடப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டின் கிங் கட்டை வடிவிலான தேர்தல் அரசியல் சம்பந்தப்பட்ட தீமில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also Read | நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா.. படத்தில் இணைந்த பிரபல தமிழ் இசையமைப்பாளர்! முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Ramcharan RC15 Movie Titled As Game Changer

People looking for online information on Game Changer, Ram Charan, RC15, RC15 Movie Title, Shankar will find this news story useful.