www.garudabazaar.com

'LEO'.. காஷ்மீர் அடுத்து இந்த ஊர்ல தான் ஷூட்டிங்?.. போட்டோவுடன் வெளிவந்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LEO படத்தின்  அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Leo Next Chennai Schedule Shooting Vijay Lokesh Sanjay Dutt

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leo Next Chennai Schedule Shooting Vijay Lokesh Sanjay Dutt

.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில்,  "நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாகவும், தன்னடக்கமான மனிதராகவும் இருந்தீர்கள். எங்களின் ஒட்டுமொத்த குழுவும் உங்கள் நடிப்பை மிகவும் அருகிலேயே பார்த்து மகிழ்ந்தோம், நீங்கள் வழக்கம் போல் மிரட்டி விட்டீர்கள் சார். சென்னை ஷெட்யூலில் மீண்டும் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்" என பதிவிட்டுள்ளனர். காஷ்மீர் படப்பிடிப்புக்கு பிறகு சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று இதன்மூலம் உறுதி ஆகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Leo Next Chennai Schedule Shooting Vijay Lokesh Sanjay Dutt

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.