Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

VIDEO: துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA படம்.. கார்த்தி வெளியிட்ட கலர்ஃபுல் தமிழ் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'சீதா ராமம்' படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Karthi Released Dulquer Salmaan Sita Ramam Movie Tamil Trailer

Also Read | "6 வருசத்துக்கு அப்பறம் இந்த கெட்-அப்".. செம்ம ஸ்மார்ட் லுக்கில் கார்த்தி வெளியிட்ட போட்டோ!

இயக்குனர் ஹனு ராகவபுடி 1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் பின்னணியில் இந்த காதல் திரைப்படத்தினை உருவாக்கி உள்ளார்.

சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலாஜி எனும் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் தருண் பாஸ்கர் நடித்துள்ளார். செல்வன் எனும் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Karthi Released Dulquer Salmaan Sita Ramam Movie Tamil Trailer

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் தெலுங்கு டிரெய்லர் நேற்று வெளியானது. இந்நிலையில் இன்று படத்தின் தமிழ் டிரெய்லர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தெலுங்கில் இடம்பெற்ற அதே காட்சிகள் தமிழ் டிரெய்லரிலும் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Karthi Released Dulquer Salmaan Sita Ramam Movie Tamil Trailer

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.

Also Read | நடிகர் ஆர்யா நடிக்கும் 'கேப்டன்'.. டிஜிட்டல் OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

VIDEO: துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA படம்.. கார்த்தி வெளியிட்ட கலர்ஃபுல் தமிழ் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Released Dulquer Salmaan Sita Ramam Movie Tamil Trailer

People looking for online information on Dulquer salmaan, Karthi, Sita Ramam, Sita Ramam Movie Tamil Trailer will find this news story useful.