Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

"6 வருசத்துக்கு அப்பறம் இந்த கெட்-அப்".. செம்ம ஸ்மார்ட் லுக்கில் கார்த்தி வெளியிட்ட போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி தனது புதிய போட்டோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor Karthi New Look After Six Years

Also Read | பிரபல டாப் போட்டோகிராபர் கூட BLACK & WHITE போட்டோ ஷூட்.. ராஷ்மிகா மந்தனாவின் வைரல் ஃபோட்டோஸ்

கார்த்தி நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் 'சுல்தான்'. இந்த சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்துக்குப் பிறகு இப்போது கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன.

இவை அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகின்றன. இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இதன் பின் தயாரிப்பு பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Actor Karthi New Look After Six Years

பொன்னியின் செல்வன் படம், செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார். கார்த்தி வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விருமன் படம் ஆகஸ்ட் 31 அன்றும் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.

Actor Karthi New Look After Six Years

சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார்.  

Actor Karthi New Look After Six Years

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது முகநூல் பக்கத்தில் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் 6 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக தாடி மீசையை எடுத்துவிட்டதாக கூறியுள்ளார். "சொகுசு நிலையில் இருந்து வெளியேறுவது மிகவும் பயமாக இருக்கிறது, ஆனால் நீங்கள் அதை ஒரு முறை செய்தால் அது அவ்வளவு மோசமானதல்ல. 6 வருடங்களுக்குப் பிறகு ஷேவ் செய்துள்ளேன்." என கார்த்தி கூறியுள்ளார்.

Also Read | நடிகர் ஆர்யா நடிக்கும் 'கேப்டன்'.. டிஜிட்டல் OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi New Look After Six Years

People looking for online information on Karthi, Karthi New Look will find this news story useful.