Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

துல்கர் நடிக்கும் 'சீதா ராமம்'.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடிக்கும் 'சீதா ராமம்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கைப்பற்றி உள்ளார்.

Sita Ramam Movie Tamil Nadu Rights Bagged by Lyca Productions

Also Read | ஆர்யா - ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படம்.. TV ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்!

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

Sita Ramam Movie Tamil Nadu Rights Bagged by Lyca Productions

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

Sita Ramam Movie Tamil Nadu Rights Bagged by Lyca Productions

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள்  மற்றும் டீஸர் & டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின்  லைக்கா புரொடக்ஷன்ஸ்   நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sita Ramam Movie Tamil Nadu Rights Bagged by Lyca Productions

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Also Read | ரசிகர்களுடன் சூரரைப் போற்று படத்த தியேட்டர்ல பார்த்த அனுபவம்.. மனம் திறந்த சுதா கொங்கரா!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sita Ramam Movie Tamil Nadu Rights Bagged by Lyca Productions

People looking for online information on Dulquer salmaan, Lyca Productions, Sita Ramam Movie will find this news story useful.