IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் மாஸ் அப்டேட்! தயாரிப்பாளர் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Next Movie with Shanthi Talkies Announcement Poster

Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் வெளியிட்ட புதிய அப்டேட்! வைரல் PHOTO

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan Next Movie with Shanthi Talkies Announcement Poster

இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.  இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

பிரின்ஸ் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் புதிய படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார், இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

SivaKarthikeyan Next Movie with Shanthi Talkies Announcement Poster

மேலும் இந்த படங்களையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SivaKarthikeyan Next Movie with Shanthi Talkies Announcement Poster

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த ஒரு புதிய படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அப்டேட் நாளை காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | அனுபமா பரமேஸ்வரன் & ரெஜினா இணைந்து நடிக்கும் புதிய படம்.. MUSIC யாரு தெரியுமா? COLOURFUL போஸ்டர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Next Movie with Shanthi Talkies Announcement Poster

People looking for online information on Shanthi Talkies, Sivakarthikeyan, SivaKarthikeyan Next Movie updates will find this news story useful.