www.garudabazaar.com

துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் 'சீதா ராமம்'.. ரிலீசான அடுத்த காதல் பாடல்.. வைரல் EVENT PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் புதிய பாடல் &  அந்த பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

Kaanunna Kalyanam Lyrical Video Sita Ramam Dulquer Mrunal Vishal Hanu Raghavapudi

Also Read | விக்ரம் பிரபு - ஸ்ரீ திவ்யா நடிக்கும் புதிய ACTION திரைப்படம்.. வரவேற்பை பெறும் மாஸ் FIRST LOOK போஸ்டர்!

இயக்குனர் ஹனு ராகவபுடி 1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் பின்னணியில் இந்த காதல் திரைப்படத்தினை உருவாக்கி உள்ளார்.

சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர்.

Kaanunna Kalyanam Lyrical Video Sita Ramam Dulquer Mrunal Vishal Hanu Raghavapudi

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலாஜி எனும் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் தருண் பாஸ்கர் நடித்துள்ளார். செல்வன் எனும் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

Kaanunna Kalyanam Lyrical Video Sita Ramam Dulquer Mrunal Vishal Hanu Raghavapudi

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்த படத்தின்  சிங்கிள் பாடல்கள் ரசிகர்களை  கவர்ந்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன.  இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் 'கண்ணுன்ன கல்யாணம்' பாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் வெளியீட்டு விழா போட்டோக்களும் வெளியாகி உள்ளன.

Kaanunna Kalyanam Lyrical Video Sita Ramam Dulquer Mrunal Vishal Hanu Raghavapudi

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி ரிலீசாகி உள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

Kaanunna Kalyanam Lyrical Video Sita Ramam Dulquer Mrunal Vishal Hanu Raghavapudi

ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.

Also Read | முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ANTHOLOGY திரைப்படம்.. பிரபல OTT-யில் எப்போ ரிலீஸ்? வெளியான சூப்பர் TRAILER!

துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் 'சீதா ராமம்'.. ரிலீசான அடுத்த காதல் பாடல்.. வைரல் EVENT PHOTOS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kaanunna Kalyanam Lyrical Video Sita Ramam Dulquer Mrunal Vishal Hanu Raghavapudi

People looking for online information on Dulquer salmaan, Kaanunna Kalyanam Lyrical Video, Mrunal Thakur, Sita Ramam, Sita Ramam Movie song will find this news story useful.