IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. இதான் தெலுங்கு தலைப்பா? ஆஹா இதுவும் செம்ம மாஸா இருக்கே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் அறிவிப்பு டீஸர் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Tittle Announcement Video

Also Read | RIP: பிரபல இயக்குனர் - நடிகர் பிரதாப் போத்தன் மறைவு.. இந்திய திரையுலகுக்கு பேரிழப்பு

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.  இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Tittle Announcement Video

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த பிரின்ஸ் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Tittle Announcement Video

இன்று வெளியிடப்பட்ட டைட்டில் அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பட தலைப்பு தமிழ் & தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | சிவகார்த்திகேயன் அடுத்த பட Update.. "தளபதி ரஜினி Look-ஆ.?" - கொண்டாடும் fans

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. இதான் தெலுங்கு தலைப்பா? ஆஹா இதுவும் செம்ம மாஸா இருக்கே! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Tittle Announcement Video

People looking for online information on Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran Movie, SivaKarthikeyan Mahaveerudu Movie, SivaKarthikeyan Next Movie updates will find this news story useful.