IRAVIN NIZHAL
www.garudabazaar.com

துல்கர் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. பிரபல இயக்குனரின் மாஸ் கேரக்டர் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் புதிய போஸ்டர்  வெளியாகி உள்ளது.

Gautham Vasudev Menon as Major Selvan‌ in Dulquer Salmaan SitaRamam

Also Read | இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்.. ஒரு பார்வை!

இயக்குனர் ஹனு ராகவபுடி  இயக்கும் சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலாஜி எனும் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் தருண் பாஸ்கர் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தை இயக்கி தேசிய விருது வென்றவர்.

Gautham Vasudev Menon as Major Selvan‌ in Dulquer Salmaan SitaRamam

இந்நிலையில் இன்று இப்படத்தின் புதிய கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் இயக்குனர் கௌதம் மேனன் 'செல்வன்' எனும் ராணுவ மேஜர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Gautham Vasudev Menon as Major Selvan‌ in Dulquer Salmaan SitaRamam

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி ரிலீசாகி உள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

Gautham Vasudev Menon as Major Selvan‌ in Dulquer Salmaan SitaRamam

ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.

Also Read | பிரபல நடிகர் வீட்டில் ஆமிர்கான் படத்தின் SPECIAL SHOW! யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

துல்கர் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் 'சீதாராமம்'.. பிரபல இயக்குனரின் மாஸ் கேரக்டர் போஸ்டர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gautham Vasudev Menon as Major Selvan‌ in Dulquer Salmaan SitaRamam

People looking for online information on Dulquer salmaan, Gautham Vasudev Menon, SitaRamam Movie will find this news story useful.