IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் அடுத்த பட Update.. "தளபதி ரஜினி Look-ஆ.?" - கொண்டாடும் fans

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில், அடுத்து உருவாகும் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது.

sivakarthikeyan next Maaveeran directed by madonne ashwin announced

Also Read | விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் புதிய படம்.. சென்னைல அதுவும் இந்த ஏரியால தான் முதல் சம்பவமா?

கடைசியாக, சிவகார்த்திகேயன் நடித்திருந்த டான் திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தும் அசத்தி இருந்தது.

இந்த படத்தினை அறிமுக இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். மேலும், பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

டான் படத்தை தொடர்ந்து, ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions தயாரிக்கின்றன.

sivakarthikeyan next Maaveeran directed by madonne ashwin announced

மேலும், இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், Prince படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கும் ரிலீஸ் ஆக உள்ளது.

sivakarthikeyan next Maaveeran directed by madonne ashwin announced

பிரின்ஸ் படத்தையடுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

பிரின்ஸ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படங்களை தொடர்ந்து, மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 'மாவீரன்' என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்றும் Title Announcement வீடியோ மூலம் தெரிய வருகிறது.

sivakarthikeyan next Maaveeran directed by madonne ashwin announced

அதே போல, சிவகார்த்திகேயனின் லுக்கும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தான் மாவீரன் படத்தையும் தயாரிக்கிறது. விது அய்யன்னா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். அதே போல, மாவீரன் படத்தின் எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இணைந்துள்ள மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | RIP: பிரபல இயக்குனர் - நடிகர் பிரதாப் போத்தன் மறைவு.. இந்திய திரையுலகுக்கு பேரிழப்பு

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan next Maaveeran directed by madonne ashwin announced

People looking for online information on Maaveeran, Madonne Ashwin, Sivakarthikeyan, SivaKarthikeyan Next Movie updates will find this news story useful.