IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்.. கேங்க்ஸ்டர் லுக்கில் SK! வெளியான கொலமாஸ் போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் புதிய முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie First Look Posters

Also Read | IPL நிறுவனர் லலித் மோடியுடன் திருமணமா? நடிகை சுஷ்மிதா சென் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியிடப்பட்ட டைட்டில் அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பட தலைப்பு தமிழ் & தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie First Look Posters

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர்களை சிவகார்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie First Look Posters

போஸ்டரில் சிவகார்த்திகேயன் கேங்ஸ்டர் தோற்றத்தில் தோன்றியுள்ளார். படத்தின் போஸ்டரில் படக்குழுவினரின் முழு பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை சிவா டிஜிட்டல் ஆர்ட்ஸ் சிவக்குமார் வடிவமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie First Look Posters

Also Read | நித்யா மேனன் & ராஷி கண்ணாவுடன் தனுஷ் ROMANTIC நடனம்.. திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த சிங்கிள்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie First Look Posters

People looking for online information on Maaveeran Movie, Mahaveerudu Movie, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran First Look Poster, SivaKarthikeyan Maaveeran Movie will find this news story useful.