The Legend
Maha others
www.garudabazaar.com

துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் 'சீதா ராமம்'.. கலர்ஃபுல் ரொமாண்டிக் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடிக்கும் 'சீதா ராமம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Mandanna Sita Ramam Movie Trailer

Also Read | பிரபல OTT-க்கு ஷாருக்கான் தயாரிப்பில் ஆலியாபட் நடிக்கும் DARLINGS.. வெளியான கலக்கல் டிரெய்லர்!

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Mandanna Sita Ramam Movie Trailer

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள்  மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ஐத்ராபாத்தில் பிரம்மாண்ட விழாவில் இந்த படத்தின் டிரெய்லர் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் ரிலீசானது. நடிகை ராஷ்மிகா மற்றும் தருண் பாஸ்கர் இருவரும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூரின் காதல் கதைகளை தேடுவது போல் டிரெய்லர் அமைந்துள்ளது. காஷ்மீர் பின்னணியில் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன.

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Mandanna Sita Ramam Movie Trailer

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Also Read | ஷாருக்கான் & தீபிகா படுகோன் நடிக்கும் 'பதான்'.. மிரட்டும் செம மாஸான மோஷன் போஸ்டர்!

துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் 'சீதா ராமம்'.. கலர்ஃபுல் ரொமாண்டிக் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Mandanna Sita Ramam Movie Trailer

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sita Ramam Movie, Sita Ramam Movie Trailer will find this news story useful.