அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், இரு வேறு பிரிவினரின் நடுவே ஏற்பட்ட மோதலில், பலரது வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பத்துக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மருதநாயகம் படத்தில் இளையராஜா இசையில் உருவான பாடலில் மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தங் கலங்குது சாமி - இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி என்ற வரிகளை பகிர்ந்த அவர்,
''மருதநாயகம்' படத்திற்காக என் மூத்த அண்ணன் திரு. இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல் 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல் இன்று மனம் பதைக்கும் 'பொன்பரப்பி'' சம்பங்களுக்கும் அப்பாடல் பொருந்திப்போவது தமிழ் இனத்திற்கே அவமானம்' என்று கூறியுள்ளார்.
மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம். pic.twitter.com/VusUubw1GV
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2019