பாடலாசிரியர், பாடகர் , இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகம்கொண்டவர் கங்கை அமரன். இவர் 'கரகாட்டக்காரன்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களை இயக்கியவர், மேலும் கமல்ஹாசனின் 'வாழ்வே மாயம்', பாக்கியராஜின் 'சுவரில்லாத சித்திரங்கள் 'போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ''சின்னத்தம்பி பெரிய தம்பி' என்ற படத்தில் ஒரு காதல் என்பது என்ற பாடலை பகிர்ந்து இளையராஜாவுடைய இனிமையான பாடல்களில் ஒன்று என தெரிவித்தார்.
அதற்கு மற்றொரு ரசிகர் இது இளையராஜா பாடல் அல்ல. அந்த பாடலுக்கு இசையமைத்தது கங்கை அமரன் என்று பகிர்ந்தார். பின்னர் இது மிகப்பெரிய விவாதமாக மாறியது. நிறைய ரசிகர்கள் இது இளையராஜாவின் பாடல் போன்ற சாயல் உள்ளது என்று குறிப்பிட்டனர்.
எனவே அதில் ஒரு ரசிகர் கங்கை அமரனின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு எது உண்மை என்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கங்கை அமரன், அது இளையராஜா வேறு படத்துக்காக பதிவு செய்தது. அதை நான் சுட்டு எடுத்துக்கொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நான் சுட்டது எல்லாமே அவருடையது தான் அது எங்கள் குடும்ப சொத்து... என்றும் சொன்னார்.
இல்லை அது இளையராஜா அவர்கள் வேறு படத்துக்காக பதிவு செய்தது .. அதை நான் சுட்டு எடுத்துக்கொண்டேன் https://t.co/sc1EzM4vS2
— gangaiamaren@me.com (@gangaiamaren) April 15, 2019