ரஜினியின் 'முள்ளும் மலரும்' படத்தில் நான் நடிக்க வேண்டியது - கமல் உருக்கம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'நண்டு' உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் இலக்கியங்களை படமாக்கி வெற்றி கண்ட ஒரு சில இயக்குநர்களில் முதன்மையானவர் அவர்.

Kamal Haasan Emotional speech about Director Mahendran

'தெறி', 'சீதக்காதி', 'நிமிர்' போன்ற படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் அந்த வேடங்களுக்கு நியாயம் செய்திருப்பார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா, ரஜினிகாந்த், ராதிகா உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மரியாதை செய்துவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசன், மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகேந்திரன் அவர்களுடன் எனக்கு நெடுநாளைய நட்பு. படங்கள் நாங்கள் குறைவாக செய்திருந்தாலும், நட்பு வெகுவாகவே இருந்தது.  பக்கத்து ஊர்காரர். அந்த ஒரு நெருக்கம் போக, திறமையானவர் என நான் வியந்த மனிதர்களில் அவரும் ஒருவர். தங்கபதக்கம் காலத்தில் இருந்தே அவரை தெரியும்.

முதலில் முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. தமிழ் படம் செய்ய அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்த திரு. பாலுமகேந்திரா அவர்களையும், மகேந்திரன் அவர்களையும் சந்திக்க வைத்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது என்றார்.

ரஜினியின் 'முள்ளும் மலரும்' படத்தில் நான் நடிக்க வேண்டியது - கமல் உருக்கம் ! வீடியோ