பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவிருக்கிறார்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தனது நிறுவனத்தின் புரொமோஷன் விளம்பரங்களுக்கு பெரிய ஹீரோக்களை எதிர்ப்பார்க்காமல் தானே நடித்து அசத்தினார்.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி பல நடிகர்கள் சாதித்துள்ள நிலையில், முன்னணி தொழிலதிபராக வெற்றிபெற்ற லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் அவர் நடித்த விளம்பரங்களை பார்த்து கலாய்த்து எக்கச்செக்க மீம்ஸ்கள் வந்தாலும், விமர்சனங்கள் எழுந்தாலும், பின்னர் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அவர் நடித்த விளம்பரங்களால் மக்களிடையே லெஜெண்ட் சரவணனுக்கென்று ஒரு பெரிய ரீச் மற்றும் மார்க்கெட் கிடைத்திருக்கு என்றால் அதில் மாற்றுக் கருத்து கிடையாது.
தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்கவிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சூப்பர் கலர்ஃபுல் விளம்பர படமும் அவரது, தமிழ் சினிமா எண்ட்ரிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
BIG-BREAKING: ஒரு நாயகன் உதயமகிறார்..!- தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் பிரபல தொழிலதிபர் வீடியோ