பெண்களின் இந்த கேள்வி உங்களுக்கு கேட்கலையா மிஸ்டர் சிஎம் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படும் கொடூர கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து கைது செய்தனர்.

Kamal Haasan questioned TamilNadu Government for Pollachi Issue

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம்  குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த பெண் அலர்ன குரல் கேட்டதுல இருந்து மனசு பதறது. என்ன ஒரு 18, 19 வயசு இருக்குமா? அந்த பெண்ணோட குரலில் இருந்த அந்த அதிர்ச்சி பயம், நண்பன்னு கூட்டிட்டு வந்தவன் தன்னை காப்பாற்றி கூட்டிட்டு போகமாட்டானா என்ற தவிப்பு, கண் மூடுகிற ஒவ்வொரு நொடியும் திரும்ப திரும்ப காதுல கேட்குது.

நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றா திரண்டப்ப தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விட்டாங்க.  அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு, உயர் மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றார். அந்த பெண்மணி யின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் எப்படி இப்படி கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் இருக்க முடியுது?

இந்த சம்பவம் பெண்ணை பெற்ற எல்லோருக்குமே பதறுதே. உங்களுக்கு பதறவில்லையா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்றதுல இருக்குற மும்முரம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யும் என பொது மக்களிடம் சொல்வதில் இல்லயே ? ஏன் ?

நேர்மையான வழியில் நியாயமான கோபத்தை பதிவு பண்ண வந்த பெண்கள் கிட்ட முறை தவறி நடந்துக்கிற இந்த காவல்துறையா எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்போகுதுனு எங்கள் பெண்கள் கேட்குற கேள்வி உங்களுக்கு கேட்கலையா மஸ்டர் சிஎம்?

பெண்களின் இந்த கேள்வி உங்களுக்கு கேட்கலையா மிஸ்டர் சிஎம் ? வீடியோ