எனக்கும் கமலுக்குமான நட்பை கெடுத்துவிடாதீர்கள் - ரஜினிகாந்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடாளுமன்ற தேர்தல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பேசியுள்ளார்.

Rajinikanth requests media not to blow up and spoil his friendship with Kamal Haasan

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஹ்சூட்டிங் பணிக்காக இன்று மும்பை செல்கிறார். இந்நிலையில், போயஸ் கார்டனில் தனது இல்லத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்தும், தனது தர்பார் திரைப்படம் குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில், ‘தர்பார் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்ததில் மகிழ்ச்சி என்றார். மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், எனது அரசியல் நிலைபாட்டை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்.

இதை ஊடகங்கள் பெரிதாக்கி எனக்கும், கமலுக்கும் ஆன நட்பை கெடுத்துவிடாதீர்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் நாட்டில் நதிகளை இணைக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

நதிகளை இணைத்தாலே நாட்டின் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இது தேர்தல் நேரம் என்பதால் அதிகம் இதை பற்றி பேச விரும்பவில்லை எனக் கூறிவிட்டு சென்றார்.