'திமுகவில் இளம் நடிகர்...' தன் மீதான குற்றச்சாட்டுக்கு கமல் பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் கமல்ஹாசனும் தனது மக்கள் நீதி மய்யம் சார்பாக வேட்பாளர்களை அறிவித்து பல்வேறு ஊர்களில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

MNM Leader Kamal Haasan speaks about Udhayanidhi Stalin and DMK

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் தனது தேர்தல் வியூகம் குறித்தும் கமல்ஹாசன் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் சினிமா பிரபலங்கள் அதிகம் இருப்பதாக தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், பிற கட்சிகளை ஒப்பிடுகையில் இங்கு சினிமா ஆட்கள் குறைவு. திமுகவில் தான் சினிமா ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறேன்  நான். அங்கு பிரச்சாரத்துக்கு போகும் இளம் நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் ஸ்டாலினின் மகன். 

எங்கள் கட்சியில் கமல்ஹாசன், கோவை சரளா, ஸ்ரீபிரியா ஆகியோரைத் தவிர வேறு நடிகர்கள் இல்லை. நீங்கள் கேள்வி கேட்டதனால், மற்றவர்களை சுட்டிக்காட்டுவதற்கு எனக்கு சௌகரியமாக போயிற்று என்றார்.

'திமுகவில் இளம் நடிகர்...' தன் மீதான குற்றச்சாட்டுக்கு கமல் பதிலடி! வீடியோ