விக்ரமின் 'கடாரம் கொண்டான்', சூர்யாவின் 'என்ஜிகே'வுடன் மோதுகிறதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் படம் 'கடாரம் கொண்டான்'.  சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் , கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Trident Arts clarifies the news about Kamal Haasan and Vikram's Kadaram Kondan and Suriya's NGK

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீநிவாஸ் ஆர். குதா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்குகிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இந்த படம் வருகிற மே 31 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என கூறப்படுகிறது. 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான 'என்ஜிகே'வும் மே 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படமும், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படமாக ஒன்றாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.