''ஒருவேள கவின் ஃபைனல் வரைக்கும் வந்திருந்தா.....'' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 11, 2019 06:55 PM
கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி பிக்பாஸ் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். கவின் திடீரென வெளியேறியது குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், எனக்கு கவின் ஆதரவாளர்களை பார்க்கும் போது அதிர்ச்சிகரமாக இருந்தது. கவின் உண்மையான அன்பை பெற்றுள்ளார். அவரது ரசிகர்கள் அவரை எந்த நிலையிலும் ஆதரிக்கிறார்கள். கவின் மட்டும் ஃபைனலுக்கு வந்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கும். என்று தெரிவித்துள்ளார்.
''ஒருவேள கவின் ஃபைனல் வரைக்கும் வந்திருந்தா.....'' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் அதிரடி வீடியோ
Tags : Kavin, Bigg Boss 3, Abhirami Venkatachalam, Mugen