காலா ஸ்டைலில் தனுஷின் அசுரனை வாழ்த்திய பா.ரஞ்சித்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 'அசுரன்'. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Pa.Ranjith praised Dhanush and Vetrimaaran's Asuran

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், டிஜே, கென், அம்மு அபிராமி, ஆடுகள் நரேன், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ''தமிழ்த்திரையில் 'அசுரன்'கள் கதையை நிகழ்த்திய காட்டிய இயக்குநர் வெற்றிமாறன் தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டியிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரி்தத கலைப்புலி தாணு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள். உரக்க சொல்லுவோம், நிலமே எங்கள் உரிமை'' என்று குறிப்பிட்டுள்ளார்.