வனிதா விஜயகுமாரின் நடவடிக்கையால் கடும் கோபத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் வீட்டில் வனிதா பேசியது தொடர்பாக, முன்னாள் போட்டியாளரான காஜல் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kaajal Pasupathi About Vanitha Vjayakumar Activity in Bigg Boss

பிக் பாஸ் வீட்டில் நேற்று மதுமிதாவுக்கும், அபி மற்றும் ஷெரீனுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை நடைபெற்றது. தமிழ்ப் பொண்ணு, கலாச்சாரம் என்ற வார்த்தையைக் கூறியதால் மதுவுக்கு எதிராக அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்தனர். அதனால் கடும் வாக்குவாதம் நடந்தது. தன் நிலையை விளக்க மது மிகவும் முயற்சி செய்தார். ஆனால், அவர் வாயை அடைக்கும்படி சக போட்டியாளர்கள் பல்வேறு கேள்விகளை அவர்மீது தொடுத்தனர்.

அப்போது வனிதா, ‘நீ சினிமாவுல கவர்ச்சியாக நடிக்க கேட்டால் நடிக்க மாட்டாயா. அது போல தான் இதுவும்' எனக் கூறினார். அது சினிமா, இது வாழ்க்கை என மது பதிலுக்கு கூறினார். ஆனாலும் அதனை வனிதா காதில் போட்டுக் கொள்ளவில்லை. ரெண்டும் ஒன்று தான் எனப் பேச்சை முடித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், தற்போதைய போட்டியாளரான சாண்டியின் முதல் மனைவியுமான காஜல் பசுபதி கடும் கோபத்துடன் ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'நடிப்புக்கும், ரியல் லைபுஃக்கும் வித்யாசம் இருக்கு வனிதா மேடம்' என அவர் கூறியுள்ளார்.