பிக் பாஸ் வீட்டில் தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச்சாரம் என்று கூறி பிரச்சனையை கிளப்புவது வழக்கமாகிவிட்டது. இந்த சீசனில் நேற்று தான் அந்த பிரச்சனை கிளம்பியது.

நம்ம ஜாங்கிரி மதுமிதா தான் தமிழ் பொண்ணு என்று கூற அபிராமி, ஷெரின், வனிதா என்று ஆளாளுக்கு அவரை விளாசினார்கள். அது எப்படி நீ அப்படி பேசலாம் என்று கொந்தளித்தார்கள்.
மதுமிதா தமிழ் பொண்ணு என்று கூறியதும் நானும் தமிழ் பொண்ணு உனக்கு முன்னாடி பிறந்த தமிழ் பொண்ணு என்று கூறி பொங்கிவிட்டார் வனிதா. இதை பார்த்த முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி, நடிப்புக்கும் நிஜ வாழ்க்கையில் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கு வனிதா மேடம் என்று ட்வீட் செய்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், மதுமிதா இருட்டு அறையில் முரட்டுக்கு குத்து படத்தில் நடிச்சப்போ தமிழ் மானம் எங்கிட்டு போச்சு. தமிழ் கலாச்சாரம் பத்தி பேசுன அந்த அம்மா முதல்ல ஒழுங்கா இருக்கணும் என்றார்.
கடந்த சீசனில் ரித்விகா சொன்னப்ப யாரும் கேட்கல, அனைவரும் ஆமாம் என்றார்கள்...அவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாலா? ஆனால் இப்ப மது சொல்றப்ப எல்லோரும் டென்ஷன் ஆகுறாங்களே...ஏன்?.. இது பாரபட்சம் அல்லவா என்று காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Last season la Rithvika sonna appa yaarum kaykala, everybody was like yes... Was it because she had huge fan following? aana eppa Madhu soldrapa yellarum tension agarangale... Why? Ain't it kinda biased https://t.co/jEXG3AIo9J
— Kaajal Pasupathi (@kaajalActress) July 1, 2019