www.garudabazaar.com

"73 நாளுக்கு பிக்பாஸ் சம்பளம் எவ்வளவு?".. நடிகை ஜனனி அளித்த பதில்! EXCLUSIVE வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சம்பளம் குறித்த கேள்விக்கு நடிகை ஜனனி பதில் அளித்துள்ளார்.

Janany answer about Her BiggBoss Season 6 Tamil salary

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பண்டிகையில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்-2'..! முழு விவரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Janany answer about Her BiggBoss Season 6 Tamil salary

Images are subject to © copyright to their respective owners.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இந்த இறுதி போட்டியில் அசீம்    பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால்  அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஜனனி, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஆவார்.

Janany answer about Her BiggBoss Season 6 Tamil salary

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஜனனி அளித்துள்ளார். அதில், "உங்களோட பிக்பாஸ் சம்பளம் எவ்வளவு?. எத்தனை நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்தீங்க?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜனனி, "73 நாட்கள் இருந்தேன்". என பதில் அளித்தார். மேலும் சம்பளம் குறித்து பேசும் போது, "என்னனு இங்க சொல்ல முடியும்?. அதெல்லாம் கம்பெனி ரகசியம் ஆச்சே" என கூறி சம்பளம் குறித்த தகவலை கூற மறுத்து டாஸ்கை ஜனனி நிறைவு செய்தார்.

Also Read | LEO படத்தில் விஜய்க்கு மகளாக BIGGBOSS ஜனனியா..?.. ஜனனி EXCLUSIVE பதில் 😍

"73 நாளுக்கு பிக்பாஸ் சம்பளம் எவ்வளவு?".. நடிகை ஜனனி அளித்த பதில்! EXCLUSIVE வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Janany answer about Her BiggBoss Season 6 Tamil salary

People looking for online information on Bigg Boss Janany, Leo, Lokesh Kanagaraj will find this news story useful.