www.garudabazaar.com

LEO படத்தில் விஜய்க்கு மகளாக BIGGBOSS ஜனனியா..?.. ஜனனி EXCLUSIVE பதில் 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LEO படம் குறித்த‌ கேள்விக்கு நடிகை பிக்பாஸ் ஜனனி பதில் அளித்துள்ளார்.

BiggBoss Janany about Vijay Lokesh Kanagaraj Leo Movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | BREAKING: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்'.. ரிலீஸ் எப்போ?

நடிகர் விஜய் நடிப்பில்  'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. S .லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

BiggBoss Janany about Vijay Lokesh Kanagaraj Leo Movie

Images are subject to © copyright to their respective owners.

ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

BiggBoss Janany about Vijay Lokesh Kanagaraj Leo Movie

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BiggBoss Janany about Vijay Lokesh Kanagaraj Leo Movie

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகை ஜனனி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் "லியோ படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடிக்கிறீங்களா?" என்கிற கேள்விக்கு "அதெல்லாம் கம்பெனி சீக்ரெட் " என பதில் அளித்தார். பிக்பாஸ் ஜனனி குணசீலன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.

Also Read | பிரபுதேவா நடிக்கும் பஹிரா.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்.. ரன்னிங் டைம் விவரம்!

LEO படத்தில் விஜய்க்கு மகளாக BIGGBOSS ஜனனியா..?.. ஜனனி EXCLUSIVE பதில் 😍 வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Janany about Vijay Lokesh Kanagaraj Leo Movie

People looking for online information on BiggBoss Janany, Leo, Lokesh Kanagaraj, Lokesh Kanagaraj Leo Movie will find this news story useful.