www.garudabazaar.com

நம்ம டில்லியின் 16 வருட திரைப்பயணம்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த Viral புகைப்படம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி திரையுலகிற்குள் நுழைந்து 16 வருடங்கள் நிறைவுபெறுவதை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Director Lokesh Kanagaraj Tweet about Actor Karthi Cinema Journey

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LOVE PROPOSALS பத்தி சமந்தா சொன்ன விஷயம்.. நடிகர் கவின் பகிர்ந்த EXCLUSIVE தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்தி. அதேபோல, PS.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் படத்திலும் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் நடித்திருந்தார். நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாக உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த ஆண்டு தன்னுடைய திரைவாழ்வில் சிறந்த ஆண்டாக அமைந்ததாகவும் நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் திரையுலக வாழ்வில் நுழைந்து 16 வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Common DP யை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நடிகர் கார்த்தி திரையுலகிற்குள் வந்து 16 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு Common DP யை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான பொழுதுபோக்கு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை கொடுத்ததற்கு நன்றி. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகமாக இருங்கள் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதனுடன் 16 வருட திரை வாழ்வில் நடிகர் கார்த்தி ஏற்று நடித்திருந்த கதாப்பாத்திரங்களின் கெட்டப் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது கார்த்தி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | உதவிக்காக காத்திருந்த மக்கள்.. களத்தில் நடிகர் சோனுசூட்.. நெகிழ்ச்சி வீடியோ..!

தொடர்புடைய இணைப்புகள்

Director Lokesh Kanagaraj Tweet about Actor Karthi Cinema Journey

People looking for online information on Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.