www.garudabazaar.com

விஜய்க்காக வெயிட்டிங்கா.?!.. Leo ஷூட்டிங்கில் GVM பிறந்த நாள் கொண்டாட்டம்.. Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாள் லியோ படப்பிடிப்பு தளத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.

GVM Birthday Celebration In Leo Shooting Spot Pic Goes viral

                          Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், காஷ்மீர் படப்பிடிப்புக்கு நடுவே நடிகரும் இயக்குனருமான கவுதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இதில் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட கேக் ஒன்றின் முன்பாக GVM நிற்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அவரை சூழ்ந்து நிற்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் தனது பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிவரும் நிலையில் ரசிகர்கள் கவுதம் மேனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

GVM Birthday Celebration In Leo Shooting Spot Pic Goes viral

People looking for online information on GVM, Leo, Lokesh Kanagaraj will find this news story useful.