www.garudabazaar.com

LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Leo Team Latest Snapshots from Kashmir Shooting

Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருவண்ணாமலை கோயிலில் இருந்து வந்த பூஜை மாலை.. திருவாசகம் பாடி மயில்சாமி உடலுக்கு அஞ்சலி.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சமீபத்தில் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்கத்தை N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Leo Team Latest Snapshots from Kashmir Shooting

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Leo Team Latest Snapshots from Kashmir Shooting

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Leo Team Latest Snapshots from Kashmir Shooting

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஷ்மீரில் இருக்கும் லியோ படக்குழுவினர் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளன.  குறிப்பாக வசன கர்த்தா ரத்னகுமார், நடிகை த்ரிஷா மற்றும் அவரது குழுவினர் காஷ்மீர்  ஏரிப்பகுதியில் எடுத்த புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன.  இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தின் அடுத்த சரவெடியான #BREAKING அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Leo Team Latest Snapshots from Kashmir Shooting

People looking for online information on Leo, Leo Team Latest Photos, Lokesh Kanagaraj, Trisha Krishnan, Vijay will find this news story useful.