www.garudabazaar.com

'LEO' பட ஷூட்டிங்கில் பிரபல பிக்பாஸ் நடிகை.. குளிரில் பாடிய செம்ம Love Song! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Abhirami Shared Leo Shooting Spot Singing Video

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சமீபத்தில் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்கத்தை N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Abhirami Shared Leo Shooting Spot Singing Video

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் நடந்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை பிக்பாஸ் அபிராமி  வெங்கடாசலம் வீடியோவை வெளியிட்டுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ஓசோனா பாடலை பனிமலை சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் பிண்ணனியில் பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

'LEO' பட ஷூட்டிங்கில் பிரபல பிக்பாஸ் நடிகை.. குளிரில் பாடிய செம்ம LOVE SONG! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Abhirami Shared Leo Shooting Spot Singing Video

People looking for online information on Abhirami Venkatachalam, Leo, Vijay will find this news story useful.