www.garudabazaar.com

LEO : சார் த்ரிஷா சார்..😍 காஷ்மீரில் இருந்து சுடச்சுட வெளிவந்த ஃபோட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார்.

Trisha viral Pics from Leo Shooting Spot Kashmir

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது. வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியானது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது என தகவல்கள் கூறப்பட்டன.

இதற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் படப்பிடிப்புக்கு பயணம் செய்தனர். இந்த பயணத்தில் நடிகை த்ரிஷா, நடிகை, ப்ரியா ஆனந்த், விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டு காஷ்மீர் சென்றனர். அங்கு லியோ படத்தின் படப்பிடிப்பு ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள சிறிய நகரத்தில் சுமார் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் குளிர்வெப்பநிலையில் நடப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

Trisha viral Pics from Leo Shooting Spot Kashmir

Image Credit : Instagram/trisha krishnan

இந்நிலையில் காஷ்மீரில் பனிமிகுந்த சூழலில் இருந்து த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காதலர் தினத்தன்று த்ரிஷா படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Trisha viral Pics from Leo Shooting Spot Kashmir

People looking for online information on Leo, Thalapathy Vijay, Trisha, Vijay will find this news story useful.