www.garudabazaar.com

பண்டிகையில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்-2'..! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Anthony Pichaikaran 2 Movie Release Date Announced

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO படத்தில் விஜய்க்கு மகளாக BIGGBOSS ஜனனியா..?.. ஜனனி EXCLUSIVE பதில் 😍

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

பிச்சைக்காரன் படத்தோடு மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி (14.04.2023) ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "துபாயின் மாஸ் பிச்சைக்காரனை காண தயாரா?" என்ற கேள்வியுடன் விஜய் ஆண்டனி ட்வீட் செய்துள்ளார்.

Also Read | பிரபல 90S ஃபோன் மாடலில் 'ஜெயிலர்' தீம் மியூசிக்கை ரீ கிரியேட் செய்த ரஜினி ரசிகர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Anthony Pichaikaran 2 Movie Release Date Announced

People looking for online information on Pichaikaaran 2, Pichaikaaran 2 update, Vijay Antony will find this news story useful.