www.garudabazaar.com

LEO படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்?.. வேற லெவலில் டிரெண்டாகும் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் LEO படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Leo Sanjay Dutt New Work out Post goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அண்ணாமலையார் கோவிலுக்கு குட்டி யானை கேட்டாரா மயில்சாமி.? நடிகர் ஜெயராம் சொன்ன‌ தகவல்..!

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

Leo Sanjay Dutt New Work out Post goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

Leo Sanjay Dutt New Work out Post goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Leo Sanjay Dutt New Work out Post goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் உடற்பயிற்சி செய்து, "உங்கள் மனதை தவறாக எடை போடாதீர்கள்." என கூறி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை சஞ்சய் தத் பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் கீழ் நடிகர் LEO என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.  விரைவில் சஞ்சய் தத், லியோ படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | குலதெய்வம் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்.. இந்த ஊர் தான் சொந்த ஊரா?..

தொடர்புடைய இணைப்புகள்

Leo Sanjay Dutt New Work out Post goes viral

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Sanjay Dutt, Sanjay Dutt New Work out Post, Vijay will find this news story useful.