www.garudabazaar.com

'LEO' படம் GOLD மாஃபியா பத்தினதா?.. படத்தின் வசனகர்த்தா அளித்த பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படம் குறித்த கேள்விகளுக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த படத்தின் வசனகர்த்தா பதில் அளித்துள்ளார்.

Writer Ratna Kumar about Leo Movie Gold Colour Designs

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் 'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

Writer Ratna Kumar about Leo Movie Gold Colour Designs

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட லியோ படத்தின் வசனகர்த்தா ரத்ன குமார் படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, "லியோ படம் Gold மாஃபியாக்களை படத்துல காட்டப்போறீங்களா? தலைப்பு வடிவமைப்புகள் தங்க நிறத்தில் உள்ளதே!" என்ற கேள்விக்கு "இல்லங்க. சாக்லேட் மூடிய காகிதம் தங்க நிறத்தில் இருக்கும்ல அது படி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டைட்டிலை பாத்தீங்கள்ல அப்படி தானே இருக்கு. " என ரத்ன குமார் பதில் அளித்துள்ளார்.

'LEO' படம் GOLD மாஃபியா பத்தினதா?.. படத்தின் வசனகர்த்தா அளித்த பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Writer Ratna Kumar about Leo Movie Gold Colour Designs

People looking for online information on Gold, Leo, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.