www.garudabazaar.com

தல அஜித் Intro Scene-அ திரும்ப திரும்ப பார்த்தேன்.. சந்தோஷ் நாராயணன் மாஸ் Reply..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் தற்போது வைரலாகி உள்ளது.

Music Director Santhosh Narayanan About Mankatha intro scene

                    Images are subject to © copyright to their respective owners.

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் சந்தோஷ் நாராயணன். 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சந்தோஷ் நாராயணன். அதில் ஆசை ஒரு புல்வெளி, இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாடலாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து, பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், காலா உள்ளிட்ட பல படங்களுக்கு சந்தோஷ் இசையமைத்திருந்தார்.

Music Director Santhosh Narayanan About Mankatha intro scene

Images are subject to © copyright to their respective owners.

தற்போது, பிரசாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் அந்தகன், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் மகான் திரைப்படம் வெளிவந்தது. இதில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் மகான் படத்தில் வரும் அரியாசனம் பாடலின் கிளிப்பை பகிர்ந்திருந்து,"இந்தப் பாடலை இசையமைப்பதற்கு முன்னர் எந்த போதை பொருளை எடுத்துக்கொண்டீர்கள்?" என கலாட்டாவாக கேட்டு, சந்தோஷ் நாராயணனை டேக் செய்திருந்தார்

இந்நிலையில் அவருடைய பதிவில் சந்தோஷ் நாராயணனும் பதில் அளித்திருக்கிறார். அதில், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் அறிமுக காட்சியின் கிளிப்பை பகிர்ந்து,"திரும்ப திரும்ப இந்த சீனை பார்த்துக்கொண்டிருந்தேன்" என கலகலப்பாக பதில் அளித்திருக்கிறார்.

Music Director Santhosh Narayanan About Mankatha intro scene

Images are subject to © copyright to their respective owners.

தல அஜித்தின் 50வது படமாக வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் மங்காத்தா. வெங்கட் பிரபுவும் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசைமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றளவும் ரசிகர்களுக்கு மத்தியில் ஃபேவரைட்டாக இருந்து வருகின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

Music Director Santhosh Narayanan About Mankatha intro scene

People looking for online information on Ajith Kumar, Mankatha, Santhosh Narayanan will find this news story useful.