www.garudabazaar.com

பிக்பாஸ் கவின் நடித்த DADA .. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டவைரல் ட்வீட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படம் குறித்து  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Lokesh Kanagaraj tweet about Dada Movie and Kavin

Images are subject to © copyright to their respective owners.

Also Read | குட் நியூஸ் சொன்ன கண்மணி & நடிகர் நவீன் 😍.. வாழ்த்து மழையில் தம்பதியர்!

காதல் திரைப்படமாக டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj tweet about Dada Movie and Kavin

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

Lokesh Kanagaraj tweet about Dada Movie and Kavin

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்  நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Lokesh Kanagaraj tweet about Dada Movie and Kavin

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமது டிவிட்டர் பக்கத்தில், "டாடா படத்தைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்களைக் கேள்விப்பட்டு வருகிறேன். வாழ்த்துகள்டா கவின்! தாதா 👍🏼 முழு படக்குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள்"  என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | கர்நாடகாவில் பிரபல நடிகருடன் ரஜினிகாந்த்.. ஜெயிலர் ஷூட்டிங்?.. தீயாய் பரவும் PHOTOS!

பிக்பாஸ் கவின் நடித்த DADA .. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டவைரல் ட்வீட்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj tweet about Dada Movie and Kavin

People looking for online information on Dada, Kavin, Lokesh Kanagaraj, Lokesh Kanagaraj tweet about Dada Movie will find this news story useful.