www.garudabazaar.com

ஆர்வமாக Unboxing செய்யும் இசைப்புயல் AR ரஹ்மான்.. ஓ இதுதானா.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசைப்புயல் AR ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Music Director AR Rahman Unboxing new Laptop Video

                                             Image Credit : AR Rahman | Instagram 

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் AR ரஹ்மான். தமிழ், இந்தி சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு AR ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன  ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளன. ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் ரஹ்மான் பெற்று உலக இசை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர்.

Images are subject to © copyright to their respective owners.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய முக்கிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது. இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் முன்னர் ஒரு பார்சல் இருக்க, அதனை ஆர்வத்துடன் Unboxing செய்கிறார் ரஹ்மான். பின்னர் உள்ளே இருந்த மேக் புக்கை புன்னகையுடன் அவர் காட்டுகிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

Tags : AR Rahman

தொடர்புடைய இணைப்புகள்

Music Director AR Rahman Unboxing new Laptop Video

People looking for online information on AR Rahman will find this news story useful.