www.garudabazaar.com

1980-90-லேயே இவ்ளோ பண்ணிருக்காரா? பலரும் அறியாத மயில்சாமியின் மறுபக்கம் பகிர்ந்த டப்பிங் கலைஞர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

Dubbing artist Kathiravan about Mayilsamy Stand up career

இந்நிலையில்தான் நடிகர் மயில்சாமி அண்மையில் சிவராத்திரி அன்று சென்னை சாலிகிராமத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.  அவருடைய மரணத்துக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கேஜிஎஃப், அவதார் 2 படங்கள் உட்பட பல படங்களில் டப்பிங் கொடுத்த பிரபல பின்னணி குரல்கலைஞர் கதிரவன், மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Dubbing artist Kathiravan about Mayilsamy Stand up career

குரல் கலைஞர் கதிரவன். Image Credit : Kathiravan Balu/Facebook.  

அதில், “அன்பு நண்பன் மயில்சாமி!!! 1989களில் "ஸ்ருதி" லஷ்மணோடு இணைந்து மயில்சாமி வெளியிட்ட "சிரிப்போ சிரிப்பு" ஒலிநாடா ( AUDIO CASSETTE ) மிகப் பெரிய வெற்றி பெற்றது மறக்க முடியாதது. பலரது இரவுகளையும் பகல்களையும் சிரித்து சந்தோஷமாக இருக்க வைத்த படைப்பு.

திரு.ஹரிசங்கரும் இணைந்து படைத்திருந்தாலும் மயில்சாமி-லஷ்மணின் சிரிப்போ சிரிப்பு என்றுதான் பேசப்பட்டது. நகைச்சுவையில் "கலாய்" என்ற விஷயத்திற்கு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியது. இன்றைய SHINCHAN கலாய்களெல்லாம் அன்றே இவர்கள் செய்திருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.  அதேபோல் 1980-90களில் இவர்கள் அறிமுகப்படுத்திய புதிய விஷயங்கள் கல்லூரி கல்ச்சுரல்ஸ் விழாக்களில் "வெரைட்டி எண்டர்டெயின்மெண்ட் " என்ற நிகழ்ச்சியை அதுவரை யாரும் பார்த்திராத வகைகளில் "மாநிலக்கல்லூரி" மாணவர்களாக  செய்து, அந்த நிகழ்ச்சியை வேற லெவலுக்கு மாற்றியவர்கள் லஷ்மண், மயில்சாமி, தாமு, மற்றும் சந்தானம் என்ற மாணவர்.

எப்போதும் கலகலப்பாகவே இருந்ததுமில்லாமல் தன்னைச் சுற்றி இருந்தவர்ஙளையும் கலகலப்பாகவே வைத்திருந்த ஒரு நல்ல மனிதன் மயிலு. இல்லாதவர்களுக்கு இயன்றவரை ஈகை செய்த நல்ல உள்ளம்.. மச்சான்..... உன் நினைவுகள் எப்போதும் எங்களோடு என்றும் இருக்கும் மயிலு...அந்த நினைவுகளுக்கு என்றும் மரணமில்லை. அதை அந்த ஆண்டவனாலும் எங்களிடமிருந்து எடுக்க முடியாது!!! நன்றாக உறங்கு மயிலு!!!!” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dubbing artist Kathiravan about Mayilsamy Stand up career

People looking for online information on Mayilsamy, RIP Mayilsamy will find this news story useful.