www.garudabazaar.com

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள்.. இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளார்களா!?..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமியின் மகன்கள் குறித்த தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Actor Mayilsamy Sons Anbhu and Yuvan acting Tamil Films

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வசூல் வேட்டையில் தனுஷ் நடித்த 'வாத்தி'.. உலகளவில் மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்..!

நடிகர் மயில்சாமி நேற்று முன்தினம் அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

Actor Mayilsamy Sons Anbhu and Yuvan acting Tamil Films

Images are subject to © copyright to their respective owners.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மாரடைப்பால் மயில்சாமி திடீரென உயிரிழந்தார்.  நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.  நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Actor Mayilsamy Sons Anbhu and Yuvan acting Tamil Films

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.

இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த என்று தணியும், சத்யராஜ் நடித்த தீர்ப்புகள் விற்கப்படும் படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.

Actor Mayilsamy Sons Anbhu and Yuvan acting Tamil Films

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2019 ஆம் ஆண்டில் மயில்சாமி யின் மூத்த மகன் அனபுவிற்கு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நாடக காதலே இல்லன்னு சொல்லி".. Pa.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' குறித்து மோகன்.G

தொடர்புடைய இணைப்புகள்

Actor Mayilsamy Sons Anbhu and Yuvan acting Tamil Films

People looking for online information on Mayilsamy, Mayilsamy Sons Anbhu and Yuvan will find this news story useful.