www.garudabazaar.com

"என்ன மாதிரி ரோஹித்தால டான்ஸ் ஆட முடியாது" 😅.. இணையத்தை கலக்கும் மீம்ஸ்.. சிவாவின் ரியாக்ஷன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவா. அகில உலக சூப்பர்ஸ்டார் என இவரை ரசிகர்கள் குறிப்பிடும் சூழலில், இவரது நடிப்பில் அடுத்ததாக "சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

Actor Shiva about his memes comapring with rohit sharma

Images are subject to © copyright to their respective owners.

Also Read | என்ன‌‌.. CM ஸ்டாலின், எடப்பாடி எல்லாம் இவரோட Fans-ஆ?!".. பிரபல நடிகர் தகவல்!!

இந்த திரைப்படத்தில் சிவாவுடன் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கி உள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள சூழலில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், லார்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளது.

சமீபத்தில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ஸ்மார்ட் போன் ஒன்றைக் கொண்டு சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக இந்த படம் எடுத்துரைப்பதும் ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது. மேலும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம், பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Shiva about his memes comapring with rohit sharma

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பிலும் நடிகர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுடன் தன்னை ஒப்பிட்டு வரும் மீம்ஸ்கள் குறித்து சிவா சொன்ன பதில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Actor Shiva about his memes comapring with rohit sharma

Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நடிகர் சிவா ஆகியோர் ஒரே போல இருப்பதாக நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் வைரல் ஆவதை பார்த்திருப்போம். இது தொடர்பாக தற்போது பேசியுள்ள நடிகர் சிவா, "நான் அவ்வளவு சோசியல் மீடியால ஆக்டிவா இல்ல. ஏன்னா லைஃப்ல ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால சோசியல் மீடியாவில் போய் டைம் வேஸ்ட் பண்ண வேணாம்ங்குறது  தான் ஐடியா. அவர் கூட என்ன கம்பேர் பண்றாங்க. அவர மாதிரி என்னால கிரிக்கெட் ஆட முடியாது, என்ன மாதிரி அவரால் டான்ஸ் ஆட முடியாது" என தெரிவித்தார்.

Also Read | "பாலியல் தொழில் பண்றதே இதுனால தான்".. விவரங்களை அடுக்கும் Bakasuran லயா Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

Actor Shiva about his memes comapring with rohit sharma

People looking for online information on Mirchi Shiva, Rohit Sharma will find this news story useful.