"மயில்சாமி ஆசைப்பட்ட ஒன்னு கடைசி வரை நடக்கல, வேதனையா இருக்கு".. டெல்லி கணேஷ் ஆதங்கம்!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners
57 வயதான மயில்சாமி, ஏராளமான திரைப்படங்களில் தோன்றியுள்ள சூழலில் நடிப்பு என்பதை தாண்டி யார் வந்து உதவி கேட்டாலும் தன்னால் ஆன உதவியை செய்யக்கூடிய குணம் படைத்தவர். இதனால் அனைவரிடமே நல்ல பேர் எடுத்துள்ள மயில்சாமியின் இழப்பு, ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமில்லாமல் பல மக்களையும் மீளாத்துறயரில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக தீவிர சிவ பக்தனான மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் பூஜை செய்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்த சமயத்தில் தான் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மயில்சாமி உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
தொடர்ந்து அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்ட சூழலில் தற்போது பல பிரபலங்கள் மயில்சாமியுடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும் உருக்கத்துடன் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். அப்படி இருக்கையில் பிரபல நடிகர் டெல்லி கணேஷ், Behindwoods சேனலுக்காக அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் மயில்சாமி குறித்து ஏராளமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது தன் வாழ்வில் செய்ய நினைத்த விஷயங்களை மயில்சாமி உங்களிடம் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் டெல்லி கணேஷ், "எனக்கு ஒரு கார் வாங்கிக்கணும், பெரிய பங்களா கட்டணும். வாழ்ந்தா அவனை மாதிரி வாழனும்ன்னு எல்லாம் அவர் சொன்னதே கிடையாது. அவர் சொல்றதெல்லாம் நம்ம நாடு நல்லா இருக்கணும், உருப்படியா இருக்கணும். இந்த ஜாதி, மதம், பேதங்கள் எல்லாம் உள்ள கொண்டு வராதீங்க. எல்லாரும் ஒன்னு தான் அப்படிங்குறத அடிச்சு சொல்லுவாரு அவரு. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.
மொத்தத்துல சொல்லணும்னா தனக்காக வாழாத ஒரு நடிகர். ஆனால் குடும்பத்தையும் நல்லா கவனிச்சுக்கிட்டார். பையனும் அப்பா மேல ரொம்ப மரியாதையோடு இருக்கான். இவருக்கும் பையன் மேல ரொம்ப பிரியம் உண்டு. குடும்பத்தை எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டார். இருந்தாலும் மத்தவங்ககிட்டயும் பிரியமா பேசுவாரு. அந்த மாதிரி இருக்கிறது ரொம்ப கஷ்டம். இவ்வளவு நல்ல மனிதனுக்கு ஏன் இவ்வளவு விரைவில் மரணம் வரவேண்டும்?. அது என்னத்துக்குன்னு தான் எனக்கு பதிலே கிடைக்கல. எல்லாரும் சொல்லுவாங்க ஜனனம்ன்னு ஒன்னு இருந்தா மரணம் இருக்கும், எல்லாம் ஓகே.
Images are subject to © copyright to their respective owners
அது அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு. உடம்பு முடியாம போய் ரொம்ப வயசாகி போனா அது வேற விஷயம். இந்த இளம் வயசுல இன்னும் நிறைய சாதிக்கிறதுக்கு இருக்கே. அரசியலில் நிறைய சாதிக்கணும்னு ஆசைப்பட்டார். 'நான் வரணும் வந்து இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்யா' அப்படின்னு சொல்லுவாரு. அது நடக்காம போச்சுங்குற கவலை தான் எனக்கு. வேற ஒன்னும் இல்ல" என குறிப்பிட்டார்.
"மயில்சாமி ஆசைப்பட்ட ஒன்னு கடைசி வரை நடக்கல, வேதனையா இருக்கு".. டெல்லி கணேஷ் ஆதங்கம்!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Delhi Ganesh Opens Up About Mayilsamy Character Exclusive
- Manobala About What He Want To Ask If Mayilsamy Came Back
- Mayilsamy Speak With Drums Sivamani Before His Death
- Actor Mayilsamy Sons Anbhu And Yuvan Acting Tamil Films
- Actor Mayilsamy Photo Inside Sivan Temple In Kelambakkam
- Actor Mayilsamy Area Peoples Recalls Memory Of Him Video
- Sendrayan About Mayilsamy Other Side Than Cinema Exclusive
- Actress Rekha Nair Emotional After Actor Mayilsamy Demise
- Palani Pattalam Shared Old Throwback Photo Of Mayilsamy
- Mayilsamy Throwback Speech At Actor Vivek Demise Viral
- Actor Jayaram About Mayilsamy Wish From Tiruvannamalai Temple
- Natty About Mayilsamy Death Share His Last Meet With Actor
தொடர்புடைய இணைப்புகள்
- "யாருக்காக மறைக்கணும்? Mayilsamy ஆசைப்பட்டது கடைசி வரை நடக்கவே இல்ல"-Delhi Ganesh Painful Interview
- "Mayil-க்கு வத்தக்குழம்பு, புளியோதரை நான் செஞ்சா தான் அவனுக்கு புடிக்கும்" 😭 கண்ணீர் விட்ட Manobala
- 'இறப்புக்கு முன் மயில்சாமி பேசிய ஆடியோ'.. மனதை கலங்கடித்த கடைசி போன் கால்..! | Mayilsamy | RIP
- Mayilsamy என்ன என்ன பண்ணிருக்காரு பாருங்க 😭 Mayil வீட்டு Area மக்களின் Heart-Breaking பேட்டி
- 🔴LIVE : 'நடிகர் மயில்சாமி திடீர் மறைவு' பிரபலங்கள் நேரில் அஞ்சலி | #mayilsamy #ripmayilsamy #rip
- அப்படி என்ன செஞ்சிட்டாரு MAYILSAMY... இத்தன பேரு அழுவுறாங்க? Don't Miss The End!
- 😢MANOHAR உனக்கு ஒன்னும் ஆகாதுடா😢HOSPITAL-ல தைரியம் சொன்ன MAYILSAMY😭
- 😢MAYILSAMY 1 LAKH வட்டிக்கு வாங்கி HELP பண்ணாரு, 😥VIVEK OBEROI GOLD CHAIN போட்டுவிட்டரு😟
- 😢MAYILSAMY-காக TAMILNADU மக்களே வந்து நிக்குறாங்க,😥இதுல அவருக்கு கிடைச்ச பாக்கியம்😭
- 😢MAYILSAMY நிறையா பேருக்கு HELP பன்னிருக்காரு,😥ஆன நான் எதுவும் கேட்டதில்ல😟
- 😢MAYILSAMY கிட்ட பிரச்சனைன்னு சொல்லிட்டா😥அத SOLVE பண்ணாம விடமாட்டாரு😭
- 🔴LIVE: MAYILSAMY-ன் இறுதி ஊர்வலம், கண்கலங்கிய திரை பிரபலங்கள்