www.garudabazaar.com

மயில்சாமியுடன் பிரபல நடிகரின் அப்பா.. வைரலாகும் 33 வருடங்களுக்கு முன் எடுத்த PHOTO..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமியின் 33 வருட பழமையான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Palani Pattalam Shared Old Throwback Photo of Mayilsamy

Images are subject to © copyright to their respective owners.

Also Read | குலதெய்வம் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்.. இந்த ஊர் தான் சொந்த ஊரா?..

நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

Images are subject to © copyright to their respective owners.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் மயில்சாமி திடீரென உயிரிழந்தார்.  நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.  நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பிரபல மெமிக்ரி கலைஞரும், நடிகருமான பழனி பட்டாளம் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "1990-ம் வருடத்தில் அண்ணன் மயில்சாமி அவர்கள் லக்ஷ்மணன் அவர்களோடு இணைந்து சுருதி இசை குழு ஆரம்பித்து என் வீட்டில் கட்டியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் இசை கச்சேரி நடத்தினார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

மயில்சாமி அண்ணனுக்கு நினைவு பரிசு வழங்குபவர் என்னுடைய அப்பா முத்து. அப்பொழுது எனக்கு 8 வயது இருக்கும், அவர் நிகழ்ச்சியை நேரில் பார்த்து தான் நான் மிமிக்ரி பண்ண ஆரம்பித்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் போது இதை சொல்லி நினைவு படுத்தி இருக்கேன். இன்று அவர் இறப்பு மிகவும் வேதனையை அளிக்கிறது. அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭." என பழனி பட்டாளம் பதிவிட்டுள்ளார்.  மேலும் தனது தந்தையுடன் மயில்சாமி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Also Read | LEO படத்துக்கு தயாராகும் சஞ்சய் தத்?.. வேற லெவலில் டிரெண்டாகும் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Palani Pattalam Shared Old Throwback Photo of Mayilsamy

People looking for online information on Mayilsamy, Palani Pattalam will find this news story useful.